
நாளை பரிஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு !பரிஸ் தமிழர்கள் வர்த்தக மையான லாச்சப்பல் பகுதியில் நாளை வியாழக்கிழமை தமிழீழத் தேசிய தலைவரது பிறந்த நாள் எழச்சி நிகழ்வு வழமைபோல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டள்ளது.
கொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடி நிiiமைகளுக்கு அமைய சமூக இடைவெளி, சுவாசக்கவசங்களுடன் நிகழ்வினை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குரிய அறிவிப்பு ஒட்டிகள் லாச்சப்பல் வர்த்தக நிலையங்கள் எங்கும் ஒட்டப்பட்டு உணர்வெழுச்சிடன் காணப்படுகின்றது.
27ம் நாள் மதியம் 12h30 மணிக்கு ஆகிய இடங்களின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்களுடன் வணக்க நிகழ்வுகள் (Cimetière Parisien de Pantin, 164 Avenue Jean Jaurès, 93500 Pantin / Place paul langevin , 95200 sarcellesஆகிய இடங்களில் இடம்பெறும் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.