மாவீரர் நாளில் தமது தோழமையினை வெளிப்படுத்திய பிரென்சு அரசியல் பிரதிநிதிகள் !

28 Nov 2020

தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கான தமது தோழமையினை பிரென்சு அரசியல் பிரதிநிதிகள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர்.

பரிசின் புறநகர் பகுதியான சார்செய் பகுதியில் அமையப்பெற்றுள்ள முதல்மாவீரன் லெப்.சங்கரின் நினைவுப்தூபியிடத்தில் இடம்பெற்றிருந்த மாவீரர் நிகழ்வில் பங்கெடுத்திருந்த, Sarcelles , Patrick Haddadநகரபிதா அவர்களும், முன்னாள் நகரபிதாவும், வல்டுவாஸ் மாவட்டத்தின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் François Pupponi இருவருமே தமது தோழமையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Aujourd’hui et comme chaque année depuis l’inauguration de la stèle à la mémoire des martyrs de l’Eelam Tamoul, je me suis rendu au centre sportif Nelson Mandela où j’ai participé à la commémoration organisée par l’association des franco-Tamouls de Garges-les-Gonesse et de Sarcelles.

Dans ce contexte particulier, je regrette de ne pas avoir retrouver tous mes amis de l’association. Cependant, c’est toujours un honneur d’être aux côtés de leur Président monsieur Ducklaus. Je le remercie pour son action quotidienne envers sa communauté. A cette occasion, j’ai rendu hommage aux dizaines de milliers de Tamouls morts alors qu’ils luttaient pour leur indépendance lors de la guerre civile au Sri-Lanka.

J’occupe la fonction de vice-président du groupe d’étude pour le peuple Tamoul et je me bats au quotidien pour que les Tamouls puissent vivre librement et en paix sur leur terre. Mon engagement pour que les souffrances qu’ils ont subies soient mieux reconnues.

தங்களது உரிமைகளுக்காக போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு இன்றைய நிகழ்வில் மரியாதை செலுத்தினேன். அவர்கள் தங்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்காக தினமும் இங்குள்ள தமிழர்களோடு சேர்ந்து போராடி வருகிறேன்.”

“அவர்கள் அனுபவித்த துயரங்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்கான எனது அர்ப்பணிப்பு இது ”“உலகின் பல நாடுகளிலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செழிப்புள்ள மொழி, மற்றும் பண்பாட்டைக் கொண்டுள்ள 80 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர்.-இவ்வாறு பிரான்ஷூவா பெப்பொனி (François Pupponi) தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

A l’invitation de l’association des franco-tamouls de Garges-les-Gonesse et Sarcelles, j’ai participé à la journée nationale des Tamouls et victimes de la guerre qui a opposé de 1983 à 2009 les tigres tamouls à l’armée cinghalaise du Sri Lanka.Les Tamouls, présents dans de nombreux pays, représentent 80 millions de personnes et sont riches d’une culture et d’une langue millénaires.

La guerre civile qui a déchiré le Sri Lanka durant 40 ans est, je le souhaite, désormais une cicatrice du passé.J’espère que l’avenir du peuple tamoul s’inscrira désormais dans la paix et la valorisation de son identité. Ville amie des peuples, Sarcelles est fière de contribuer à cette reconnaissance.

“இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போர் தற்போது கடந்த காலத்தின் ஒரு வடு ஆகும். இனிமேல் தமிழ் மக்களின் எதிர்காலம் அமைதியிலும் அவர்களது அடையாளங்களை மேம்படுத்துவதிலும் ஆழ வேரூன்றிவிடும் என நம்புகிறேன்.“தமிழர்களின் அங்கீகாரத்துக்குப் பங்களிப்பதில் நட்பு நகரமான சார்ஸல் (Sarcelles) பெருமை கொள்கிறது “-என்று தெரிவித்துள்ளார்.

சார்செய் தமிழ் சங்கத்தின் முன்கையெடுப்பினால் லெப்.சங்கருக்கான தூபி அமையப்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

நன்றி : கார்த்திகேசு குமாரதாஸன்

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW