வீடுகள் தோறும் மாவீரர் இல்லங்கள் : உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இணைவழி மாவீரர் நாள் !

28 Nov 2020

வீடுகள் தோறும் மாவீரர் நினைவுகள் நிறைந்ததான உணர்வெழுச்சியோடு, உலகத்தமிழர்களின் இணையவழி தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல புலம்பெயர் தேசங்களில் பெருந்திரளாக ஒன்றுமுடியாத சூழல் ஒருபுறமும்,
கொரோனாவை விட கொடியதாக தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளினை முன்னெடுக்க முடியாத சிங்கள அரச தடைகள் மறுபுறமும் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில் வீடுகளே மாவீரர் நினைவு இல்லங்களாக மாறியதாக, தாயகத்தில் வீடுகளில் ஒளியேற்றிய சமவேளை, புலம்பெயர் தமிழர் வீட்டு வரவேற்பறைகளை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணையவழி தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய வணக்க நிகழ்வு அமைந்திருக்க, ஜேர்மனியின் பேர்லின், அமெரிக்காவின் நியு ஜெர்சி பகுதிகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, சுவிஸ், டென்மார்க், நோர்வே என புலம்பெயர் நாடுகளில் இருந்து தமது வீடுகளை மாற்றிய புலம்பெயர் அடுத்ததலைமுறை, பாடல்கள், கவிதைகள், நினைவுரைகள், நடனங்கள், பேச்சுக்கள் என மாவீரர்நினைவுகளோடு இணையவழி இணைந்திருந்தனர்.

இதேவேளை முதல்வித்தாகிய லெப்.சங்கரின் நினைவலைகளோடு தமிழர் தேசிய இயக்கத்தின் தோழர் தியாகு அவர்கள் பங்கெடுத்திருக்க, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் மாவீரர் நினைவுரையினை தமிழ்நாட்டில் இருந்து வழங்கினார்.

தென்னாபரிக்காவில் இருந்து பிரபல சட்டவாளர் கிறிஸ் கோவிந்தர், வட அயர்லாந்தில் இருந்து இயக்கத்தின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் டக்களஸ் மக்டெர்மொற் அவர்களும் சிறப்புரைகளை வழங்கினர்.

இதேவேளை பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வகட்சிக்குழுவின் தலைவர்  Elliot Colburn, நாடாளுமன்ற உறுப்பினர்கள் Siobhain McDonagh,  Robert Halfon , Bob Blackman ஆகியோரது கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈழவிடுதலைப் போராட்டம் தான் சந்திக்கின்ற தடைகளை, சவால்களை எதிர்கொண்டு புதிய களங்களையும், யுக்திகளையும் கைக்கொண்டு தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கின்றது என்பதற்கு சான்றாக உலக்ததமிழர்களின் இணையவழி மாவீரர் அமைந்திருத்தமை இங்கு குறிப்பிடதக்கது.

https://www.facebook.com/tgteofficial/videos/887573375406338
RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW