டிசெம்பர் 15 : பொதுமுடக்கம் நீக்கம், மீண்டும் ஊரடங்கு !

10 Déc 2020

எதிர்வரும் 15ம் நாள் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் நீக்கம் செய்யப்படுவதோடு, இரவு 8 மணி ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருமென பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

15ம் தேதி முதல் வெளிச்செல்வதற்கான அனுமதிப்பத்திர முறை நீக்கம் செய்யப்படுவதோடு, ஊரடங்கு சட்டமானது காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரங்கு சட்ட நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு தேவைகளுக்கு வெளிச்செல்வது தடை செய்யப்படுவதோடு, இதற்குரிய புதிய படிவம் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஊரடங்கு சட்ட நேரத்தில் வெளியில் செல்வதற்கான அத்தியாவசிய காரணிகள் :

1 – வேலைக்கு செல்லுதல்

2 – குடும்ப அவசிய தேவைகள், மத சடங்குகள்

3 – உடல்நல சுகாதாரம்

4 – வலுவிழந்தவர்களுக்கான உதவி

5 – வீட்டுப்பிராணிகளை வெளிக்கொண்டு செல்லல்

  • Les déplacements professionnels
  • Les déplacements pour motif familial ou religieux
  • Les déplacements pour raison de santé
  • Les déplacements des personnes en situation de handicap ainsi que leur accompagnant
  • Les déplacements effectués dans le cadre de missions d’intérêt général
  • Les déplacements pour sortir les animaux de compagni

நத்தார் பண்டிகை நாளான டிசெம்பர் 25 இரவு மட்டும் ஊரடங்கு சட்டம் நீக்கம் செய்யப்படுவதோடு, புத்தாண்டை வரவேற்றும் டிசெம்பர் 31ம் நாள் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்று 5000 பேர் வரையில் வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவருவது என்ற அரசாங்கத்தின் இலக்குக்கு மாறாக நிலைமைகள் இருக்கின்ற நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW