தமிழராய் பெருமை கொள்வோம் : கனேடிய தேசிய ஊடகத்தில் ஈழத்தமிழ் பெண் !

ஈழத்தை பூர்வீகமாக கொண்டு கனேடிய மண்ணில் பிறந்து வளர்ந்து, தற்போது கனடாவின் தேசியு ஊடகங்களில் CTV News, CP 24 news முக்கிய செய்தியாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன் ஈழத்தமிழ் பெண்ணான தமிழர்களை பெருமை கொள்ள வைத்து வருகின்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் சிறப்பு செய்திகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர் நாளாந்த செய்திகளை வழங்கி வந்தமை கனேடிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.கனேடிய மண்ணில் சமூகச் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை எழுத்தாளரகவும் இருந்து இருதய நோயின் தாக்கத்தால் மரணித் பூநகரான் குகதாசன் அவர்களது புதல்வியாவர் இவர்.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து புகலிட தேசங்களில் தஞ்சம் புகுந்த முதற்தலைமுறை, தங்களை மெழுகாய் உருக்கி, அடுத்த தலைமுறைக் வாழ்ந்த புலம்பெயர் ஈழத்தமிழர் வரலாற்றின் நிமிர்வாய் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாய் இவர் போல் பல திகழத் தொடங்கியுள்ளமை, தமிழராய் பெருமை கொள்ள வைக்கின்றது.