லாச்சப்பலில் மீட்கப்பட்ட கிலோத்தங்கம் ! தமிழ் உணர்வாளர்கள் கோபம் !!

18 Fév 2021

லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது.

https://www.lepoint.fr/faits-divers/paris-une-fonderie-d-or-clandestine-decouverte-par-la-police-18-02-2021-2414573_2627.php

தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காhவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்டுள்ள , குறித்த நபர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக அந்த அமைப்புக்கான பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள விடயம் தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ‘விடுதலைப்புலிகளுக்கு எப்பவும் எதிர்பை தான் காட்டி வாழ்ந்து வந்தவர் என்பதை நான் நேரில் வர்த்தக சங்க சந்திப்பில் கண்டேன்’ புலிகளின் குரல் முரளி தனது சமூகவலைத்தள பதிவில் இடித்துரைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வது காவல்துறை, நீதித்துறையின் கடமை. ஆனால் குறித்த சம்பவத்துடன் விடுதலைப்புலிகளை தொடர்படுத்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமைக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்காலம் என சந்தேகத்தினை எழுப்பியுள்ள சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகிந்தன், இது தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

தமிழினப்படுகொலைக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையளரது அறிக்கை, பல பிரென்சு ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில், இவ்வாறான செய்திகளை அதனை திசை திருப்புவதாக உள்ளதெனவும் மகிந்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தி தொட்பல் ஊடகத்துக்கு தமது எதிர்வினைகளை இளையோர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். எதிர்வினையாற்ற விரும்புவோர் குறித்த இந்த https://www.europe1.fr/formulaire/contact , https://www.leparisien.fr/contact/ மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தலாம்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW