டிசெம்பருக்கு பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் !

17 Nov 2020

கொரோனாவின் தாக்கம் அடுத்தவாரம் உச்சத்தை அடையும் என்ற எதிர்பார்ப்போடு தற்போதை பொதுமுடக்க கட்டுப்பாடுகள் டிசெம்பருக்கு பின்னரும் தொடரும் என பிரமர் ஜோன் கஸ்ரெக்ஸ் சற்று முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறன், தொழில்துறை அமைச்சர் புறுனோ சகிதம் தனது ஊடக சந்திப்பினை நடத்திய பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் கீழ் வரும் புள்ளிவிபரங்களுன் தனது விரிவான விளக்கத்தினை வழங்கினார்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களில் இறந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 42 ஆயிரத்தினை தாண்டுகின்றது.- கடந்த வாரம் முதல் 400ல் இருந்து 500 வரையிலான நாளாந்த உயிரிழப்புகள் பதிவாகின்றன.

பிரான்சில் நான்கில் ஒருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 30 விநாடிக்கு ஒருவர் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். 3 நிமிடத்துக்கு ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தப்படுகின்றார். தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளவர்களில் 40வீதமானவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்கள் 7 700 தீவிர சிகிச்சை கட்டிகள் முன்னரங்கில் உள்ளன.இவ்வாறு தற்போதைய நிலைவரங்களை புள்ளிவிரபமாக தெரிவித்த பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ், உணவகங்கள், அருந்தகங்கள், விளையாடரங்குகள், உட்பட பல இடங்கள் டிசெம்பருக்கு பின்னரும் திறப்பதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவாசிய வெளிநடமாட்டத்துக்கான பத்திரபதிவு நடைமுறையும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நடமுறையில் உள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் அடுத்த 15 நாட்களுக்கு விலக்குகள் இல்லை என தெரிவித்த பிரதமர், டிசெம்பர் 1க்கு முன்னராக சிறு வணிக நிறுவனங்கள் திறப்பத்கு சாத்தியமில்லை எனுவும் தெரிவித்துள்ளார். ( சிறு வணிகர்கள் தொடர்சியாக கோரிவருகின்றனர்.)

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு வணிக நிறுவனங்களின் என்பது டிசெம்பர் 1க்கு பின்னராக நிலைமைகளை; பொறுத்த முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித் பிரதமர், நத்தார் – புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னரைப் போன்று அமையாது எனவும் தெரிவித்தார்.கடந்த 15 நாட்களில் 581 000 காவல்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 90 000 பேர் தண்டத்துக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW