La Chapelle காவல்துறை சோதனை வலயத்துக்குள் வந்தது !

தமிழர் வர்த்தக மையமான லாச்சப்பல் உட்பட அதன் சுற்றுவட்டாரங்கள் இன்று காவல்துறையின் தீவிர சோதனைக்குள் வந்ததாக லு பரிசியன் செய்தி வெளியிட்டுள்ளது.
Après la pédagogie, les PV pleuvent. Les opérations de contrôle du respect des règles sanitaires s’intensifient à Paris. Ce mercredi, 130 policiers étaient déployés dans les secteurs Barbès-Chapelle-Marx-Dormoy (XVIIIe). Dans les poches, peu d’attestations valables.
பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கு அமைய, அத்தியாசிய தேவைகளுக்குரிய பத்திரத்துடன் வெளி நடமாட்டத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற சோதனையே மேற்கொள்ளப்பட்டதாகவும், 130 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சோதனைகளை தீவிரமாக்குமாறு மாவட்ட காவல்துறை ஆட்சியங்களுக்கு உள்துறை அமைச்சு நேற்று பணித்திருந்தது.இதுவரை இல் டு பிரான்சில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தண்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்