வைரசின் தாக்கம் குறைந்தது…..ஆனால் உயிரிழப்புக்கள் ?

19 Nov 2020

கொரோனா வைரசின் தொற்று குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறன் இன்று தெரிவித்திருந்தாலும், உயிரிழப்புக்கள் குறையவில்லை என்றே தெரிகின்றது.

இன்று வியாழக்கிழமை சுகாதார அறிக்கையில் 429 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கபட்டிருப்பதானது, கடந்த சில நாட்களாகவே 400ஐ குறையாத உயிரிழப்புகளாக தொடர்கின்றன.
பொதுமுடக்கத்தின் பயனாக வைரஸ் தொற்று குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், இருப்பினும் பொதுமக்கள் தமது சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளின் நெருக்கடி நிலை குறையாவிட்டாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய (வியாழன்) சுகாதார அறிக்கையில 21 150 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளனர். 2 213 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 345 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, 4 653 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW